script charset='utf-8' src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/> rbala.rbala: 2010

Thursday, September 30, 2010

World is so Beautiful

World is so Beautiful.











Friday, August 6, 2010

Neon sign in Temple tower (Gopuram)

நேரம் நல்ல நேரம்




அருளோடு பெருநிலம் அளிக்கும், வளம் தரும்
மற்றும் தந்திடும்பெற்ற தாயினும் ஆயின செய்யும்,
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்.
நாராயணா எனும் நாமம்.
ஓம் நமோ நாராயணாய


ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ வரமங்கைத் தாயார் சமேத ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் திருவடி சரணம் ... !!!


மங்களாசாஸனம் 
நம்மாழ்வார்

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே.
கருளபுட்கொடி சக்கரபடை வானநாட !என் கார்முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய் !
தெருள் கொள் நான்மறை வல்லவர்பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கிருந்தாய் ! அறியேன் ஒரு கைம்மாறே
.........

-நம்மாழ்வார்



Bombay Sisters - 07 Piravithanai.mp3
Download at rapidlibrary mp3 music
Rapid Library Music

நாங்குநேரி; இந்த சிறு நகரம் பாரத நாட்டின்  தென்கோடிப் பகுதியில்  அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இங்குதான் ஸ்ரீ தோத்தாத்திரிநாதன் ஆலயம் இருக்கிறது. இவ்வாலயம்  வானமா மலை மடத்தின் நிர்வாகத்தில் சுயமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
 "வந்தாரை வாழவைக்கும் வானமாமலை " என்று இங்குள்ள மக்கள்  மிகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றார்கள்.

Tirunelveli off the Nagercoil NH7 is the Lord Vaanamaalai Thothadri Nathar temple at Nanguneri. Out of the 108 Divya Desams, there are only 8 that have Lord’s Idol emerging on its own from the earth and this is one of the eight.
A speciality of this Divya Desam is that an oil pooja is performed daily for the main deity and this oil is deposited in the 25 feet open well within the temple. The oil is said to have medicinal values and is believed to cure both internal and external illness including ulcer and skin diseases.
The 600 years old Vaanamaamalai mutt(Jeers) are the hereditary trustees of the temple. Most of the main festivals at this temple are celebrated in a unique way, not found in any other Divya Desams. The main deity (Lord Deivanayakan) and Goddess are brought to the Mutt and the entire pooja festivities of the divine couple is performed at the Mutt.






நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்:


திருநெல்வேலிக்கு தெற்கே சுமார் 33கி.மீ. தொலைவில் இவ்விடம் உள்ளது. இத்திருக்கோவில் நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இக்கோவில் கி.மு.1500 ஆண்டுகள் பழமையானது. பின்னர் பாண்டிய மற்றும் நாயக்கர் மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. மூலவரான ஸ்வயம்வேக்த பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இதன் உற்சவர் தெய்வநாயகன், தாயார் வரமங்கை ஆவர். கோவிலின் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், லக்ஷ்மி, ஸ்ரீ ராமர், ஆண்டாள், கருடன், ஆழ்வார்கள், உடையவர், வேணுகோபாலன் மற்றும் மணவாள மாமுனிகள் தனித்தனி கருவறைகளில் காட்சி அளிக்கின்றனர்.

இக்கோவிலிலுள்ள திறந்த வெளி கிணற்றிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய் மற்றும் சந்தன எண்ணெயால் இங்குள்ள பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுவதே இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த எண்ணெய்கள் மருத்துவ குணமுடையவை. தீராத பிணிகளையும் தீர்க்கும் சக்தி உடயவை. கோடையிலும் குளிரிலும் இக்கிணறுகள் திறந்திருந்த போதும், இங்குள்ள எண்ணெய் சுத்தமானதாகவும், நறுமணமுடயதாகவும், சுவைமிகுந்தும் காணப்படுகிறது.

The place is about 33 kms to south of Thirunelveli. This is one of 108 Divya Desam. The temple is about 1500 BC, years old and later it was renovated by Pandya and Nayakar kings. Main deity is Swayam vektha Vanamalai Perumal, with Sridevi and Bhoodevi in sitting posture. Urchavar is known as Devainayakan and thayar Vara mangai Nachiar.We can see other deities like Chakkratt azwar, Lakshmi, Sri Ramar, Andal, Garudan, Azwars, udayavar, Venu gopalan, and Manavalama munigal, in seperate sanctums as we go round the temple prakaram. The speciality of the temple being the Perumal is taking oil abhisheham everyday with Gingili oil and Sandalwood oil which is being collected in an open well. The oil has medicinal properties and supposed to cure many incurable diseases. In spite of the well being open to rain and sun, the oil is clean, sweet smelling and sweet tasting.





நீண்ட  நாட்களாகவே இங்குள்ள  கோவில் கோபுரத்தில்  சங்கு சக்கரம் நாமம்  அடங்கிய நியான் ஒளி விளக்கு ஒன்றைப் பொருத்தவேண்டும்  என்ற  குடும்பப் பெரியோர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும்  பாக்கியம் அண்மையில் கிடைக்கப் பெற்றோம் .   










நெல்லை மாவட்டம் இராதாபுரம் தாலுகா சமூகரெஙகபுரம் "கோட்டை" கி.மு.நடுவப்பண்ணையைச் சேர்ந்த அமரர் ஈஸ்வர‌ம்மாள் நினைவாக அன்னாரின் மூத்த மகன் திரு.வெ.தோத்தாத்திரி அவர்களின் உபயமாக இந்த நியான் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.


                                                                                 
















                                                                                             

 


நாங்குநேரி கோவில் கோபுரத்தில் நியான் விளக்கைப் பொருத்திப் பார்த்தபோது அடைந்த பரவசமான அனுபவம்.
எல்லா புகழும் இறைவனுக்கே.

திருவரமங்கை, திருவானமாமலை, தோதாத்ரி என்றெல்லாம் அழைக்கப்பெறும் நாங்குநேரி திருத்தலத்தில் ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் (தோதாத்ரி நாதர்) கோவில் கொண்டுள்ளார். ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றமையால் நாகணைசேரி என்றும்; அழகிய மரங்களும் மலையும் சூழ்ந்த இடமானபடியால் வானமாமலை என்றும்; இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் "நான்குநேரி' என்றும் இத்தலத்துக் குப் பெயர்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். தாயார்- ஸ்ரீ வரமங்கை நாச்சியார். உற்சவர் தெய்வநாயகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, கோதா சமேதராக பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ளார். இதில் ஸ்ரீ வரமங்கைத் தாயாரும் உண்டு.

இந்த ஆலயத்தை அடுத்து ஒரு ஏரி உள்ளது. ஆலயக் கருவறையும் அதனுள்ளேதான் இருக்கிறது. ஏரிக்குள் நீர் நிறைந்தால் கருவறையைச் சுற்றியும் தண்ணீர் நிறைந்தே காணப்படும். மூலவர் ஸ்ரீ வானமாமலைப் பெருமாளும் ஏரியின் நடுவில் உள்ள பாறையில் வடிக்கப்பட்டவரே! இங்கு பெருமாளுக்கு தினமும் தைலாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனம் ஆறுபடி நல்லெண் ணெயுடன் சந்தனத் தைலமும் கலந்து செய்யப்படுகிறது. இந்தத் திருமஞ்சனத் தைலம் அருகிலுள்ள எண்ணெய்க் கிணற்றில் ஊற்றப்படுகிறது. உற்சவ நாட்களில் 112 படி தைலக் காப்பு செய்யப்படுகிறது. இந்த நாழிக் கிணற்றில் உள்ள தைலம் தீராத சரும வியாதிகளைத் தீர்ப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இத்தைலத்தின் மகிமையை அகத்தியர் தனது மருத்துவக் குறிப்பில் குறிப்பிட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.

இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு சந்நிதி இல்லை. ஆனால் அவரது திருவுருவம் பெருமாளின் சடாரியில் உள்ளது. இத்தலத்தில் நம்மாழ்வாரே வந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது. இத்தலத்துப் பெருமாள் இந்திரன், பிரம்மா, உரோமச முனிவர், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு காட்சி தந்தவர் என்பதால், கர்ப்பகிரகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, பெரிய திருவடி சூரியன், சந்திரன், சாமரங்கள் வீசும் ஊர்வசி, திலோத்தமையுடன் பிருகு, மார்க்கண்டேயர், விஷ்வக்சேனரும் உள்ளனர். அனைத்து சிற்பங்களும் சுதையினால் ஆனவையே.

இத்தலத்தில் கருடாழ்வார் எந்த நேரமும் புறப்படத் தயாராக இருக்கும் கோலத்தில் திருமாலுக்காக நிற்கிறார். ஆதிசேஷனுக்கு அடுத்தபடியாக கருடனைப் போற்றி வரமளித்தது இத்தலத்தில்தான் என்று கூறப்படுகிறது.

108 திருப்பதிகளில் ஒன்றான இந்த பாண்டிய நாட்டுத் திருப்பதியை நம்மாழ்வார் பதினோரு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். அஷ்ட சுயம்புத் தலங்களில் ஒன்றாக இத்தலம் கருதப்படுகிறது. (பிற ஏழு தலங்கள்- பத்ரி நாராயணன், முக்தி நாராயணன், நைமிசாரண்யம், புஷ்கரம், திருவேங்கடம், ஸ்ரீ முஷ்ணம், திருவரங்கம் என்பவையாகும்.)

இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. நெல்லையிலிருந்து திருக்குறுங்குடி வழியாகச் செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம்.


















































கோபுரத்தின் உட்பகுதியில் - வயிற்றுப் பகுதியில் உத்திரத்தில் செதுக்கப்பட்டுள்ள அழியாத அழகிய மரச் சிற்ப வேலைப்பாடுகள்.     






















தேரோடும் வீதி .சன்னதித் தெரு.



A bad odour from the bodies of the demons Madhu and Kaidaba killed by Lord Vishnu enveloped the entire earth. The purity of the earth was much polluted. Mother earth suffering from the bad odour performed penance fromthis
soil and got purified. The Lord appeared before Mother earth in the same form as he is in Vaikunda.

The place is surrounded by 4 lakes. Hence the name Nangu Eri-Nanguneri. Almost in all temples, there would be only one Swambumurthy but in Nanguneri there are 11, Sridevei, Bhoodevi, Sun, Moon, Bruhu rishi, Markandeya, Urvasi, Thilothama and Garuda and Vishvaksenar. This is a unique feature of this temple.

Of the 8 temples where Perumal is a Swayambu Murthi in India, the temple in Badrinath in North is covered by fog and could not be visited for worship. InNanguneri, the Swayambu Perumal can be worshipped throughout the year. The other significance of the temple is that the Lord is appearing in a Durbar with his consorts Sridevei and Bhudevi.
The Lord's one hand is showing the feet, telling the devotee whose thoughts are centred at his feet would have a place on his lap. His hand has a Parathyega Chakra symbol and those who have the luck of seeing the symbols would have no enemies at all.





கொடிமரம்.





The Lord in the temple is bathed in gingely oil each day and the oil is saved in a well here. Those suffering from skin diseases use to apply the oil in their body and consume a few drops for cure. Then they buy the oil from the temple stores and offer it for abishek.

The Mother Goddess idol which was originally in the Tirupathi temple was brought here then. The story goes that Thirupati Perumal appeared in the dream of Senior Jeer of the temple and told him that the Varagunamangai Thayar belonged to the Perumal of Nanguneri and directed him to take the bride there.

The headquarters of the Vanamamalai Jeer is in the Nanguneri temple. The sadari (bearing the feet of the lord) also has the face of the Jeer.

 



Festivals

The Brammotsavam elebrated in the month of Chithirai (April-May) is an important festival of thetemple The puja time is 7.00 a.m. to 12.a.m. and 5.00 p.m. to 9.00 p.m.
General information:
All buses from Tirunelveli to Nagercoil pass throughNanguneri. The temple is in the heart of the place. Nearest railway station is Nanguneri & Valliyur and airport Thoothukudi.
 







கோவில் மதிலை ஒட்டி அமைந்துள்ள மிகப்பெரிய ஏரி. மழை காலத்தில் நிரம்பி வழியும் காட்சி அற்புதமாக இருக்கும்.
















சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழங்கின‌
ஆழ்கடல் அலை திரை கையெடுத்து ஆடின‌
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன் 
வாழ்புகழ் நாராணன் தமரைக் கண்டு உகந்தே.
                         ‍                                 - நம்மாழ்வார்.

நாளெல்லாம் நாம் சொல்வோம் நாவலிக்க 
நாராயணா எனும் திருநாமம்.  



வானமாமலை ஸ்ரீ தோத்தாத்ரி நாதப் பெருமாள் திருவடி சரணம் ..
மூலவர் : தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்).
உற்சவர் : - தெய்வநாயகன்
அம்மன்/தாயார் : வரமங்கை தாயார்.
தல விருட்சம் : மாமரம்,
தீர்த்தம் : சேற்றுத்தாமரை
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வானமாமலை, திருவரமங்கை
ஊர் : நாங்குனேரி
மங்களாசாசனம்
நம்மாழ்வார்
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே.
ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர்.
இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது.
மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.
தோதாத்ரி ÷க்ஷத்திரம்: ராஜகோபுரம் உயர்ந்தோங்கி கம்பீரமாக உள்ளது.
செவ்வந்தி நாயக்கர்கள் செய்துள்ள தெய்வத் திருப்பணிகளுள் ஒன்று, இங்குள்ள செவ்வந்தி மண்டபம். திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வீரப்பநாயக்கர் மண்டபம், கண்டுகளிக்க வேண்டிய ஒன்று. அற்புதமான சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன.
இந்தக் கலைக்கூடத்திற்கு அப்பால் லட்சுமிவராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், மச்ச முதல் கல்கி வரையிலான தசாவதார மூர்த்திகளுக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. கொடிமரம், பின்பு குலசேகரன் மண்டபம். இந்த மண்டபத்தில் பதினோராழ்வார்களைத் தரிசிக்கலாம். நம்மாழ்வார் சடாரியாக உற்சவரின் முன் இருக்கிறார். குலசேகரன் மண்டபத்தில் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார், மணவாள மாமுனிகள், உடையவரான இராமானுஜர் ஆகியவர்களின் சன்னதிகள் உள்ளன.
மேலும் இராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் தனித்தனியே உள்ளன. கர்ப்பகிருகத்தில் தோதாத்ரிநாதன் பிராட்டியர் இருவருடன் பட்டாபிஷேக கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆதிசேஷன் தங்கக்குடை பிடிக்கிறார். இத்தல எம்பெருமான் பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், சந்திரசூரியர், விஷ்வக்ஸேனர், ரம்பை, திலோத்தமை என அனைவரும் ஒருசேர ஏக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய நிலையையும் கருவறையில் கண்டு வியக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தை வலம்வந்தால் அங்கே 32 ரிஷி, முனிவர்கள் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும்.












ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே
கண்ணா என்றும் என்னையாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேனமாம் பொழில் தண்
சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை
வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே!

- என்று பரவசத்துடன் நம்மாழ்வார் துதித்து மகிழ்வது வானமாமலைப் பெருமாளை. வானமுட்டும் மாமலை போன்ற கீர்த்தியுடைய  இவரை தோத்தாத்ரிநாதன் என்று அழைத்து பூரிக்கிறது வடமொழி. 
ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் தனிச் சிறப்பை விளங்க வைக்கும் வகையில் தனித்தனியான, வித்தியாசமான பிரசாதங்கள் வழங்கப் படுகின்றன. இந்த வானமாமலைப் பெருமாள் கோயிலில் கிடைப்பது, எண்ணெய் பிரசாதம்! இந்தக் கோயில் வளாகத்தில் ஓர் எண்ணெய்க் கிணறே இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் ஊற்றாக வருவதல்ல; ஊற்றுவதால் நிரம்பி இருப்பது. ஆமாம், பெருமாளுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் இந்தக் கிணற்றில் ஊற்றி சேகரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது வெறும் பிரசாதமல்ல; மருந்தே என்கிறார்கள் பக்தர்கள். ஆமாம், சர்வ ரோக நிவாரணியாகப் பயன்படுகிறது, இந்த எண்ணெய்.

பெருமாளுக்கு இவ்வாறு எண்ணெய்த் திருமஞ்சனம் செய்வது ஒரு முக்கியமான சம்பிரதாயம். வேறெந்த திவ்ய தேசத்திலும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி. ஒவ்வொரு தை அமாவாசை
அன்றும் ஒரு கோட்டை அளவு (210 லிட்டர்) சுத்தமான நல்லெண்ணெய் வரவழைக்கப்பட்டு, பெரிய வெள்ளிக் கொப்பரைகளில் சேகரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயில் சில மூலிகைப் பொருட்கள் இடப்பட்டு பக்குவப்படுத்தப்படுகிறது. பிறகு மந்திர கோஷங்கள் முழங்க, எண்ணெய் பெருமாளை உச்சி முதல் பாதம்வரை தழுவி மகிழ்கிறது. இது தவிர தினமுமே பெருமாளுக்கு மூன்று லிட்டர் எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட, இந்த எண்ணெய் மூலவர் சந்நதிக்கு வெளியே கோமுகி வழியாக ஒரு தொட்டிக்கு வந்து சேருகிறது. இந்தத் தொட்டியிலிருந்து முகந்தெடுத்து மண்டபத்துக்கு வெளியே உள்ள கிணற்றுக்குள் விடுகிறார்கள். பிறகு இந்தக் கிணற்றிலிருந்து இறைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

‘‘அந்தகால மரபுப்படி எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது வாராந்திர வழக்கமாக இருந்தது ‘சனி நீராடு’ என்பார்கள். பல்வேறு காரணங்களால் உண்டாகும் உடல், மன சூட்டைத் தணித்து, உடல் நலத்தை சீராக வைத்திருக்கும் அந்தப் பழக்கம், பல குடும்பங்களில் இப்போது முற்றிலும் காணாமலேயே போய்விட்டது. மக்கள் மறந்த ஒரு நற்பழக்கத்தை மாதவன் மறக்காமல் தான் மேற்கொண்டு, அந்த எண்ணெயையே பிரசாதமாக்கி பக்தர்களுக்கு வழங்குகிறார்’’ என்றார் ஒரு பெரியவர். 

வானமாமலை அல்லது நான்குநேரி என்றழைக்கப்படும் இத்தலம், அந்நாளில் தாயாரின் திருப்பெயராலேயே ஸ்ரீவரமங்கை என்று போற்றப்பட்டது. நான்கு பெரிய ஏரிகளாகப் பிரித்து, பாசனத்துக்கும் பிற உபயோகத்துக்கும் இங்குள்ள குளத்து நீர் பயன்பட்டதால், நான்கு ஏரி என்று பெயர் படைத்து, நான்(ங்)குநேரி என்று இப்போது அறியப்படுகிறது. 

இந்த ஆலயத்தில் தற்போது அனுசரிக்கப்படும் சம்பிரதாயங்களுக்கு மூலகாரணமானவர் மணவாள மாமுனிகள். இவர் நிலைநாட்டிய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்தான் வானமாமலை ஜீயர். இவர்மூலம் வானமாமலை மடம் நிறுவப்பட்டது. திருக்கோயிலை ஒட்டியே இந்த மடம் அமைந்திருக்கிறது. ‘மஹாவிஷ்ணுவின் பாதுகைகள்தான் நம்மாழ்வார் (வைணவக் கோயில்களில் பக்தர்கள் தலையில் வைக்கப்படும் சடாரி ஆசிர்வாதம் நம்மாழ்வாரின் பாதுகைகளே); நம்மாழ்வாரின் பாதுகைகள்தான் மணவாள மாமுனிகள்; மணவாள மாமுனிகளின் பாதுகைகளே வானமாமலை ஜீயர்’ என்ற ஒரு வழக்கும் உண்டு. அதனாலேயே இந்தத் தலத்திலுள்ள சடாரியில் நம்மாழ்வார் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நவதிருப்பதிகளில் ஆழ்வார்-திருநகரியில் மட்டுமே நம்மாழ்வாருக்கு விக்ரகம் அமைந்திருக்கிறது; இங்கோ சடாரியில் அவர் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத, மூல நட்சத்திர நாளில் மணவாள மாமுனிகள் அணிந்திருந்த மோதிரத்தை, தாம் அணிந்துகொண்டு, பக்தர்களுக்குப் புனித தீர்த்தம் அருள்கிறார் இந்த ஆலயத்தின் ஜீயர் சுவாமிகள். சடாரியாக சிரசில் நம்மாழ்வார் ஆசியளிக்க, மோதிரமாக மணவாள முனிகள் தீர்த்தம் அளிப்பதுதான் பக்தர்களுக்கு எத்தகைய பேறு!

மூலவர் சந்நதியில் கூட்டம் மிகுந்திருக்கிறது - வெளியே அல்ல; உள்ளேயே! ஆமாம், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக மூலவர் தோத்தாத்ரிநாதன், கருடாழ்வார், பிருகு முனிவர், விஷ்வக்சேனர், மார்க்கண்டேயன், சூரியன்-சந்திரன், உற்சவர் தெய்வநாயகன், மூலவருக்கு சாமரம் வீசும் ஊர்வசி, திலோத்தமை...

தேவ கன்னியரான ஊர்வசியும் திலோத்தமையும் இங்கே எப்படி வந்தார்கள்?  தேவலோகத்தில் ஆடல், பாடல்களில் மட்டுமல்லாது பேரழகிலும் தலை சிறந்து விளங்கியவர்கள் இந்தக் கன்னியர். இந்திரசபையில் ஆடுவதும் பாடுவதும் அவற்றால் தேவர்களை மகிழ்விப்பதுமாகத் தம் பிறவியின் பயனை அனுபவித்து வந்த அவர்களுக்கு, தம்மாலும் ஓர் உயர்நிலை அடைய முடியுமா என்ற ஏக்கம் படர்ந்தது. தமக்கு இனி பிறவி வேண்டாம்; ஆனால் அதேசமயம் தாம் அழிவற்றவர்களாகவும் திகழ வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். உடனே படைக்கும் கடவுளான பிரம்மாவை அணுகி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். 

பிரம்மனோ, ‘‘படைப்பது என்பது என் தொழில்தானே தவிர, நானும் மஹாவிஷ்ணுவுக்கு அடிபணிந்து செயலாற்றுபவன்தான். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதோ அல்லது நிராகரிப்பதோ செய்ய அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆகவே, பூலோகத்தில், சீரிவரமங்கை திவ்யதேசத்தில், தோத்தாத்ரிநாதனாகக் கோயில் கொண்டிருக்கும் அவரை நோக்கி நீங்கள் தவமியற்றினீர்களானால் உங்கள் விருப்பம் நிறைவேறலாம்’’ என்று சொல்லிவிட்டார். 

உடனே இருவரும் இந்தத் தலத்துக்கு வந்தார்கள். பிறவி இல்லாததும் அழிவற்றதானதுமான நிலை என்பது என்ன? அது திருமாலடியோடு ஐக்கியமாவதுதானே! அந்த அரிய வரத்தை இந்தத் தல நாயகன் ஊர்வசி, திலோத்தமை இருவருக்கும் அருளினார். ஆகவே அவர்கள் இருவரும் இந்தத் தலத்தில் பெருமாளுக்கு சாமரம் வீசும் கைங்கரியத்தை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள். அந்தக் கோலத்தைதான் நாம் இப்போது மூலவரின் கருவறையில் காண்கிறோம்.

இந்தப் பெண்களைப் போலவே கருடனும் திருமாலைப் பிரியாத நிலை வேண்டினான். கிரேதாயுகத்தில் காஷ்யப முனிவரின் இரு மனைவியர் கத்ருவும் விநதையும். கத்ரு நாகங்களாகப் பல குழந்தைகளைப் பெற்றாள். இந்தக் குழந்தைகளுக்கு ஆதிசேஷன் மூத்தவனாகவும் தலைவனாகவும் விளங்கினான். விநதைக்கு இரண்டே புதல்வர்கள் - ஒருவன் அருணன், இன்னொருவன் கருடன். ஒருமுறை கருடன் பாதாளலோகத்துக்குத் தன் பெரிய அன்னையின் புதல்வர்களான நாகர்களைப் பார்ப்பதற்காகப் போனான். அவர்களோ அவன் தங்களுடைய சிற்றன்னையின் மகன் என்ற வேறுபாடு காரணமாக அவனைப் பழித்தார்கள். அதைக் கேட்கப் பொறுக்காத கருடன், அவர்களைத் தாக்க ஆரம்பித்தான். விவரம் கேள்விப்பட்ட ஆதிசேஷன் அங்கே வந்து, ‘‘நாம் இருவருமே திருமாலுக்கு சேவை புரிபவர்கள்; இவ்வாறு இவர்களுடன் நீ சண்டையிட்டாயானால் அது பரந்தாமன் பெயரைக் கெடுக்குமல்லவா?’’ என்று கேட்டு கருடனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். உடனே கருடன், ‘‘உனக்கென்ன நீ எப்போதுமே உன் தலைகளால் திருமாலுக்குக் குடை பிடிக்கிறாய்; உன் உடலே அவருக்கு படுக்கையாகிறது; எனக்கு அத்தகைய பேறு உண்டா? எப்போது திருமால் வெளியே போகிறாரோ அப்போது மட்டும்தானே நான் அவரைத் தாங்கியபடி உடன் செல்கிறேன்!’’ என்று ஏக்கமாகச் சொன்னான். 

அதுகேட்ட ஆதிசேஷன், ‘‘அப்படியானால் நீ சீரிவரமங்கை தலத்துக்குச் சென்று தோத்தாத்ரிநாதரை துதித்து வா; உன் விருப்பம் ஈடேறும்’’ என்றான். அதன்படியே கருடனும் திருமாலைத் துதிக்க, தோத்தாத்ரிநாதன் அவனுக்குக் காட்சி தந்து, ‘‘நீதான் எனக்கு வாகனமாகவே இருக்கிறாயே, இன்னும் என்ன குறை உனக்கு?’’ என்று கேட்டார். ‘‘எனக்கும் ஆதிசேஷனைப் போல உங்களுடனேயே இருக்கும் பாக்கியம் வேண்டும்’’ என்று கேட்டான். திருமால் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘‘ஆதிசேஷன் நிறைவேற்றும் பொறுப்புபோல உனக்கு நான் இப்போதைக்கு அளிக்க முடியாது. ஆனால், வைகுந்தத்தில் என் வாசலில் எப்போதும் என்னைச் சுமந்து புறப்பட தயாரான நிலையில் நீ இருக்கலாம். கலியுகம் வரப்போகிறது. பக்தர்களுக்கு என் சேவை அடிக்கடி தேவைப்படும். அப்போது நீ தயாராக இருந்தால் நான் உன்மீதமர்ந்து என் பக்தர்களுக்கு உதவ முடியும். அதாவது கிட்டத்தட்ட நான் உன்மீது நாளெல்லாம் பயணிக்கும் சூழ்நிலை வரும்’’என்றார், தோத்தாத்ரிநாதர். காலத்தையே நிர்ணயிக்கும் அவருடைய பதிலால திருப்தியடைந்தான் கருடன். 

கோயிலில் நாயக்கர் மண்டபம் மிகுந்த அழகுடன் பொலிகிறது. இதனை வீரப்ப நாயக்கர் மண்டபம் என்றழைக்கிறார்கள். தூண்களில் நாயக்க மன்னர்களின் சிலைகளைக் காண முடிகிறது. இவர்களுக்கு இடையே ஒரு கிணறு உள்ளது. மரத்தட்டு போட்டு அதன் வாயை மூடியிருக்கிறார்கள். வேகம் மிகுந்த நீரூற்று கொண்ட கிணறாம் இது. குறிப்பாக மழைக்காலத்தில் இதிலிருந்து நீர் பொங்கி வெளியே வழிந்து கருவறை முன்னால்வரை நீர் சூழுமாம். பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொண்டிருப்பான்; இங்கோ மழைக்காலத்தில், நீர்க்கடலில் அமர்ந்திருக்கிறான் என்று கொள்ளலாமா! பக்தர்கள் எல்லாம் அந்த நீரில் பாதங்கள் மூழ்க நின்றபடி பகவானை தரிசிப்பார்கள்.

தோத்தாத்ரிநாதர் அமர்ந்திருப்பதால் அவரது ஒரு பாதத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. பெருமாள் பிரயோக சக்கரம் ஏந்தியிருப்பது, கருடனுக்கு அவர் கொடுத்த வாக்கை நினைவூட்டுகிறது. கருவறை முன்னால் சிறு மாடத்தில் நரசிம்மர் காட்சியளிக்கிறார். 

அடுத்தடுத்து ராமர் (சீதை, லட்சுமணனுடன்), லக்ஷ்மிவராகப் பெருமாள், விஷ்வக்சேனர், லட்சுமி நாராயணன்-திருக்கச்சி நம்பிகள், கிருஷ்ணன், ஸ்ரீநிவாசன், சக்கரத்தாழ்வார் என்று வைணவப் பெருந்தகைகளை தரிசித்து ஆசி பெறலாம். தங்க சப்பரம் ஒன்று சிறு ஒளியிலும் ஜொலிக்கிறது. சித்திரை மற்றும் பங்குனி மாத விசேஷங்களில் 7ம் நாள் திருவிழாவில் பெருமாளையும் திருவரமங்கைத் தாயாரையும் இந்தப் பல்லக்கில் சுமந்து பவனி வருவார்கள். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த வைபவத்தைக் கண்டு மனம் நிறைகிறார்கள்.

சீரிவரமங்கை என்ற திருவரமங்கைத் தாயார் தனி சந்நதியில் அருள் பொங்க நோக்கி நம் மனக்குறைகளைக் களைகிறாள். இங்கே மாமரம் தலவிருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது. திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ள இந்தக் கோயிலுக்கு நிறைய பேருந்து வசதி உண்டு. கோயில் தொடர்புக்கு, 9994432520 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.  


   

108 திவ்ய தேசங்களின் பட்டியல்




திவ்யதேசங்களின் பட்டியல்

ஆந்திரப் பிரதேசம் & வட இந்தியா

1. திருப்பதி
2. அகோபிலம்
3. சாலிகிராமம்
4. நைமிசாரண்யம்
5. மதுரா
6. கோகுலம்
7. தேவ பிரயாகை
8. திருப்பிரிதி
9. பத்ரிநாத்
10. அயோத்தி
11. துவாரகை

கேரளா

1. திருவனந்தபுரம்
2. திருகாட்டுகரை
3. திருமூழிக்களம்
4. திருவல்லா
5. திருக்கடித்தானம்
6. செங்கானூர்
7. திருப்புலியூர்
8. திருவாரன்விளை
9. திருவண்வண்டூர்
10. திருநாவாய்
11. திருவித்துவக்கோடு

தமிழ்நாடு

மதுரை

1. திருமெய்யம்
2. திருக்கோட்டியூர்
3. திருக்கூடல்
4. அழகர் கோவில்
5. திருமோகூர்
6. திருவில்லிப்புத்தூர்
7. திருத்தங்கல்
8. திருப்புல்லாணி

காஞ்சிபுரம்

1. திருக்கச்சி
2. திருஅஷ்டபுயகரம்
3. திருவெக்கா
4. திருத்தண்கா
5. திருவேளுக்கை
6. திருக்கள்வனூர்
7. திரு ஊரகம்
8. திரு நீரகம்
9. திருக்காரகம்
10. திருக்கார்வானம்
11. திருபரமேச்சுவர விண்ணகரம்
12. திரு பவளவண்ணம்
13. திருப்பாடகம்
14. திரு நிலாத்திங்கள் துண்டம்
15. திருப்புட்குளி

சென்னை

1. திருவல்லிகேணி
2. திருநீர்மலை
3. திருவிடவெந்தை
4. திருகடல்மல்லை
5. திருநின்றவூர்
6. திருவள்ளூர்
7. திருக்கடிகை

மாயவரம் & சீர்காழி

1. திருவழுந்தூர்
2. திருஇந்தலூர்
3. காழிசீராம விண்ணகரம்
4. திருக்காவளம்பாடி
5. திருச்செம்பொன் செய்
6. திருஅரிமேய விண்ணகரம்
7. திரு வண்புருஷோத்தமம்
8. திருவைகுண்டவிண்ணகரம்
9. திருமணிமாடம்
10. திருதேவனார்த்தொகை
11. திருதெற்றியம்பலம்
12. திருமணிக்கூடம்
13. திருவெள்ளக்குளம்
14. திருப்பார்த்தன் பள்ளி
15. தலை சங்க நாண்மதியம்
16. திருச்சிறுபுலியூர்
17. திரு வாலி திருநகரி

தஞ்சாவூர்

1. திருச்சித்திர கூடம்
2. திருக்கண்ணங்குடி
3. திரு நாகை
4. திரு தஞ்சை
5. திருக்கன்டியூர்
6. திருக்கூடலூர்
7. திரு கவித் தலம்
8. திரு ஆதனூர்
9. திருப்புள்ளம் பூதங்குடி
10. திருக்குடந்தை
11. திருசேறை
12. திரு நந்திபுரவிண்ணகரம்
13. திரு நறையூர்
14. திருவிண்ணகர்
15. திருவெள்ளியங்குடி
16. திருக்கண்ணமங்கை
17. திருக்கண்ணபுரம்

திருச்சி

1. திருவரங்கம்
2. திருக்கரம்பனூர்
3. திருக்கோழி
4. திருஅன்பில்
5. திருப்பேர் நகர்
6. திருவெள்ளறை
7. திருக்கோயிலூர்
8. திருவயிந்திரபுரம்

திருநெல்வேலி

1. திருவரமங்கை
2. திருக்குறுங்குடி
3. திருவைகுண்டம்
4. திருவரகுணமங்கை
5. திருப்புளிங்குடி
6. திருக்குருகூர்
7. திருட்துலைவில்லி மங்கலம்
8. திருக்கோளூர்
9. திருக்குளந்தை - இது தான் நமது கோவில்
10. தென்திருப்பேரை
11. திருவட்டாறு
12. திரு வண் பரிசாரம்

மோட்சம்

1. திரு பரமபதம்
2. திரு பாற்கடல்

ந்த காணொளியைக்கண்டு களியுங்கள்.

widgetshttp://www.youtube.com/watch?v=FA7eQPNc9kw